சேத்தியாத்தோப்பு அருகே உள்ள எறும்பூர், தர்மநல்லூர், கத்தாழை, மதுவானைமேடு உள்ளிட்ட பகுதிகள் உள்ள குளங்கள், ஏரிக ளில் புற்கள் வகையைச் சேர்ந்த விழல் ஏரா ளமாக விளைந்துள்ளன. விழல் கடுமையான வறட்சியிலும் வளரக்கூடியதும் ஆகும். பல நூறு ஏக்கர் பரப்பில் விளைந்துள்ள விழல் தற்போது அறுவடை மற்றும் விற்பனை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விழலானது வீடுகளுக்கு கூரை போட பயன்படுகிறது. விழலைக்கொண்டு வீடுகளுக்கு ஒருமுறை கூரை போட்டால் சுமார் 10 ஆண்டுக்கும் மேல் அந்த வீட்டின் கூரை சேதமில்லாமல் அப்படியே இருக்கும். விழலால் கூரை அமைக்கப்பட்ட வீடுகளில் மழை,வெயில் மற்றும் கோடைகாலம் என எல்லாக் காலத்திலும் வீட்டுக்குள் குளிர்ச்சியாகவும் இதமான சூழலும் நிலவும். கிராமங்களில் பலரும் பாராம்பரிய முறையில் விழலை தான் வீடுகளுக்கு கூரை போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பழங்காலத்தில் குடில்கள், ஆசிரமங்கள் போன்றவை விழலால் தான் அமைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago