விருதுநகர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அரசு மருத்துவ மனைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர் களோடு சிறப்பு வார்டுகள் தயார் படுத்தப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 137 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகினர்.
விருதுநகர் மாவட்டத்தில் இது வரை 18,240 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 17,070 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 237 பேர் உயி ரிழந்தனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தற்போது 933 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனாவால் பாதிக்கப்பட் டவர்களின் எண்ணிக்கை நாளு க்கு நாள் அதிகரித்து வருவதால், அரசு தலைமை மருத்துவமனை, வட்டார மருத்துவமனைகள் மற்றும் மினி கிளினிக்குகளிலும் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட் டத்தில் கரோனாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 1,200 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில் 260 படுக்கைகள் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வசதியோடு அமைக் கப்பட்டுள்ளன.
கூடுதல் சிகிச்சைக்கான படுக்கைகளையும் தயார் செய்ய சுகாதாரத் துறை திட்டமி ட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago