விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத் தில் மேலும் ஒரு தொழிலாளி உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், வச்சக் காரப்பட்டி அருகே உள்ள சதா னந்தபுரத்தில் தேசிங்குராஜ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த 15-ம் தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இதில், அங்கு பணியாற்றிய ஆனையூரைச் சேர்ந்த பாண்டி என்பவரது மனைவி ஆதிலட்சுமி (34), ராமர் மனைவி செந்தி (35), ராமச்சந்திரன் மனைவி முத்துமாரி (37), அய்யம்பட்டியைச் சேர்ந்த சுந்தரபாண்டி (40) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இவர்கள் 4 பேரும், சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால், விபத்து நடந்த அன்று இரவே ஆதிலட்சுமி உயிரிழந்தார். மற்ற 3 பேரும், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், சுந்தரபாண்டி நேற்று முன்தினம் இரவு உயிரி ழந்தார்.
இவ்விபத்து குறித்து வச்சக் காரப்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago