கொந்தகையில் நடந்த அகழாய்வில் : எலும்புக்கூடு, இரும்பு வாள் கண்டெடுப்பு :

By செய்திப்பிரிவு

தமிழக தொல்லியல்துறை சார்பில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் 7-ம் கட்ட அகழாய்வுப் பணி நடந்து வருகிறது. கீழடியில் இதுவரை கருப்பு, சிவப்பு நிற பானை, கல்லாலான உழவு கருவி, பகடை, பாசிகள் உள்ளிட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

கொந்தகையில் நேற்று 2 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன.

அதில் ஒரு முதுமக்கள் தாழியில் சிதைந்த நிலையில் மனித எலும்புக்கூடும், இரும்பு வாளும் இருந்தன. இதையடுத்து அந்த முதுமக்கள் தாழியில் உள்ள எலும்புக்கூடு ஒரு போர் வீரனுடையதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்