திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தவிர்க்கக் கூடுதலாக 3 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக சாலை விபத்து கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது பிற வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன.
இதையடுத்து, நெடுஞ்சாலை யோரங்களில் வாகனங்களை நிறுத்தவிடாமல் தடுக்கவும், அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் கூடுதல் ரோந்து வாகனங்களை இயக்க திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ரவளிபிரியா நடவடிக்கை எடுத் தார். அதன்படி கூடுதலாக 3 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் நேற்று முதல் இயக்கப்பட்டன. இதனை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளைச்சாமி தொடங்கி வைத்தார்.
இந்த ரோந்து வாகனங்களில் செல்லும் போலீஸார், திண்டுக்கல் புறவழிச்சாலை முதல் திருச்சி ரோடு தங்கம்மாபட்டி வரையிலும், திண்டுக்கல் புறவழிச்சாலை முதல் கரூர் ரோடு கல்வார்பட்டி வரையிலும், செம்பட்டி முதல் வத்தலகுண்டு வரையிலும் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago