திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்ற உள்ளவர்கள் கணினி முறையில் நேற்று தேர்வு செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகள் வாணியம்பாடி ஜெயின் மகளிர் கல்லூரியில் வரும் மே 2-ம் தேதி எண்ணப்படுகின்றன.
வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. மே 2-ம் தேதி காலை ஒவ்வொரு தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட வுள்ளன. முதலில் தபால் வாக்குள் எண்ணப்பட உள்ளன. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந் திரத்தில் பதிவான வாக்குகள் ரவுண்டு வாரியாக எண்ணப்பட வுள்ளன.
இதற்கான பணியில் ஈடுபட உள்ள பணியாளர்கள் கணினி முறையில் தேர்வு செய்யும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார். இதில், கணினி குலுக்கல் முறையில் 68 கண்காணிப்பாளர்கள், 68 உதவியாளர்கள், 68 நுண் பார்வையாளர்கள் என மொத்தம் 204 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் கூறும்போது, ‘‘மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. அதற்கான ஏற் பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜெயின் மகளிர் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பணியில் உள்ள காவலர்கள், துணை ராணுவத்தினர், எல்லை பாதுகாப்புப்படையினர் என அனைவருக்கும் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. வாக்கு எண்ணும் நாளில் பணியில் உள்ள மற்ற பணியாளர்களுக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப் படவுள்ளன.
தொகுதிவாரியாக வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இதில், வாணியம்பாடி தொகுதிக்கு 26 ரவுண்டுகளும், ஜோலார்பேட்டை தொகுதிக்கு 25 ரவுண்டுகளும், ஆம்பூர் மற்றும் திருப்பத்தூர் தொகுதிகளுக்கு தலா 24 ரவுண்டுகளின் வாக்கு எண்ணப்பட வுள்ளன.
வாக்கு எண்ணும் நாளில் பணியாளர்கள், ஊடகத் துறை யினர், காவல் துறையினர், வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் என அனைவரும் சென்று வர தனியாக வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் பணிகள் அனைத்தும் கேமராவில் பதிவு செய்யப்படும். ஒவ்வொரு சுற்று முடிந்த பிறகும் அதற்கான பதிவுகள் அங்குள்ள அறிவிப்பு பலகையில் எழுதப்படும். பத்திரிக்கையாளர்களுக்கு அச்சிடப்பட்ட காகிதத்தில் சுற்று முடிவு தெரிவிக்கப்படும். தொகுதி கண்காணிப்பாளர்கள் அதற்கான பணியை மேற்கொள்வார்கள்.
வாக்கு எண்ணும் மையத்தில் தேவையான அனைத்து அடிப் படை வசதிகளும் செய்யப் பட்டுள்ளன. வாக்குப்பதிவு எப்படி அமைதியான முறையில் நடைபெற்றதோ அதேபோல, வாக்கு எண்ணும் பணிகளும் அமைதியான முறையில் நடைபெற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’’என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago