கடலூர் அருகே உள்ள வசந்தராயன் பாளையம் பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பு அருகே உள்ள குடியிருப்பு பகுதி ஒன்று உள்ளது. இங்கு ஒரு ஓடையின் அருகில் வைக்கப்பட்டிருந்த மீன் பிடிக்கும் வலையில் நல்ல பாம்பு ஒன்று சிக்கியது. மயங்கிய நிலையில் அது இருந்தது.
‘உயிரிழந்து விட்டது’ என்று நினைத்த அப்பகுதி மக்கள் இது குறித்து கடலூர் விலங்குகள் ஆர் வலர் செல்வாவுக்கு தகவல் தந்த னர். நேற்று மதியம் 12 மணிக்கு அந்தப் பகுதிக்குச் சென்ற செல்லா உயிரிழந்து விட்டதாக கூறப்பட்ட நல்ல பாம்புக்கு ஒரு பாட்டிலில் குடிக்க தண்ணீர் கொடுத்துள்ளார்.
கொஞ்சம், கொஞ்சமாக தண் ணீர் குடித்த நல்ல பாம்பு இயல்பு நிலைக்குத் திரும்பியது. பின் படம் எடுத்து ஆடத் தொடங்கியது. பின் னர் செல்லா லாவகமாக அந்தப் பாம்பைப் பிடித்து, பாதுகாப்பாக எடுத்துச் சென்று வனத்துறை உதவியுடன் வேப்பூர் காப்பு காட்டில் விட்டார்.
"வெயில் காலத்தில் காட்டுப் பகுதியில் தண்ணீர் இல்லாமல் இருப்பதால் வனப்பகுதியில் இருக்கும் பாம்புகள் குடியிருப்பு பகுதியில் நுழைவதுண்டு. அப்படிவரும் பாம்புகள் கழிவுநீர் சாக்கடையில் தண்ணீர் குடிக்கவும், எலி பிடிக்கவும் வரும். இது போலவந்த இந்த நல்லபாம்பு மீன்பிடி வலையில் சிக்கி மயங்கி விட்டது"' என்று அதைப் பிடித்து காப்புக் காட்டில் விட்ட செல்வா தெரிவித்தார்.
கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீர் குடித்த நல்ல பாம்பு இயல்பு நிலைக்குத் திரும்பியது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago