சிவகங்கை மாவட்டத்தில் விதிமீறல் - ரூ.37.59 லட்சம் அபராதம் வசூல் :

சிவகங்கை மாவட்டத்தில் கரோ னா தடுப்பு விதிமுறையை மீறியவர்களிடம் ரூ.37.59 லட் சம் அபராதம் வசூலிக்கப்பட் டுள்ளதாக ஆட்சியர் பி.மது சூதன்ரெட்டி தெரிவித்தார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா தொற்று பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நட வடிக்கைகளை எடுத்துள்ளது. முகக்கவசம், சமூக இடைவெளி, கூட்டமாகக் கூடுவதைத் தவிர்த்தல் உள்ளிட்ட விதிமுறைகளை அரசு விதித்துள்ளது. இவற்றை மீறுவோருக்கு அபராதம் விதிக் கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் முதல் தற்போது வரை சுகாதாரத்துறை மூலம் ரூ.4,27,000, காவல்துறை மூலம் ரூ.28,20,000, வருவாய்த்துறை மூலம் ரூ.3,15,200, ஊரக வளர்ச்சித் துறை மூலம் ரூ.14,100, பேரூராட்சிகள் நிர்வாகம் மூலம் ரூ.45,200, நகராட்சி நிர்வாகம் மூலம் ரூ.1,37,600 என மொத்தம் ரூ.37,59,100 அபராதத் தொகை யாக வசூலிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் விதிமுறையை கடைபிடித்து கரோனா பரவலைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவே அபராதம் வசூலிக்கப்படுகிறது, என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்