திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வருங்கால வைப்பு நிதியில் தங்களுக்கு கடன் வழங்க வேண்டும் எனக் கோரி, நேற்று பணிக்குச் செல்லாமல் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு, திருத்துறைப்பூண்டி நகராட்சி தூய்மை பணியாளர்கள் சங்கத்தின் கவுரவத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளருமான கே.ஜி.ரகுராமன் தலைமை வகித்தார். தொழிற்சங்க தலைவர் நா.பாலசுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட் டக் குழு உறுப்பினர்கள் சுப்ரமணி யன், சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
4 மணிநேரத்துக்கும் மேலாக வேலைநிறுத்தப் போராட்டம் நீடித்ததைத் தொடர்ந்து, நக ராட்சி பொறுப்பு ஆணையர் செங்குட்டுவன், நகரமைப்பு ஆய்வாளர் அருள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், வருங்கால வைப்பு நிதியில் அனைத்து பணியாளர்களுக்கும் ஏப்.24-ம் தேதிக்குள் கடன் வழங்குவது, தூய்மைப் பணி யாளர்களின் ஊதியத்தில் பிடித் தம் செய்யப்பட்டு கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தாட்கோ நிறு வனங்களுக்கு செலுத்தப்படாமல் உள்ள நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த நடவ டிக்கை எடுப்பது, துப்புரவு பணிக்கு பயன்படுத்தப்படும் பழுதான வாகனங்களை சரி செய்வது,டெங்கு தடுப்பு பணியாளர்களுக்கு ஆட்சியர் பரிந்துரைத்த ஊதி யத்தை அமல்படுத்த நடவ டிக்கை எடுப்பது, குப்பைக் கிடங்கை ஒரு வாரத்துக்குள் சரி செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago