திருவாரூர் மாவட்டத்தில் காணா மல் போன மற்றும் திருடுபோன ரூ.11 லட்சம் மதிப்புள்ள 100 செல் போன்கள் மீட்கப்பட்டு உரியவர்க ளிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் 2020- 2021-ம் ஆண்டில் காணாமல் போன மற்றும் திருடுபோன செல்போன்கள் தொடர்பான வழக் குகளை நுண்ணறிவு போலீ ஸார் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இதில், ரூ.11 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் மீட்கப்பட்டன. அவற்றை உரியவர்களிடம் ஒப்ப டைக்கும் நிகழ்ச்சி திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற் றது.
இதில், திருவாரூர் எஸ்.பி கயல்விழி செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். அப்போது அவர் கூறியது: 2020 -21-ம் ஆண்டில் திருடுபோன 100 செல்போன்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட் டுள்ளன. மேலும், மீதமுள்ள புகார்கள் தொடர்பாக தனிப்படை போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செல்போன் திருட்டு மற்றும் காணாமல்போன செல்போன்கள் தொடர்பான வழக்குகள் விரைவில் முடிக்கப்படும். செல்போன்கள் திருடு போவதைவிட, பொதுமக் களின் அலட்சியத்தால் அதிக அள வில் செல்போன்கள் காணாமல் போயுள்ளது விசாரணையில் தெரி யவந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் இதுவரை ரூ.40 லட்சம் மதிப்புள்ள 455 செல் போன்கள் மீட்கப்பட்டு, உரியவர் களிடம் காவல்துறை ஒப்படைத் துள்ளது என அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago