பேராவூரணியில் சாலை மேம்பாட்டு திட்டத்துக்காக - ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடக்கம் :

சாலை மேம்பாட்டு திட்டத்துக்காக பேராவூரணி கடைவீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி கடைவீதி, காலகம்-ஆவுடையார் கோவில் சாலை, புனல்வாசல்- பத்துக்காடு சாலை, சீதாம்பாள்புரம் பகுதி உள்ளிட்ட பல்வேறு சாலைகளை அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணிகளுக்கு, சில மாதங்களுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டது. தற்போது, அதற்கானப் பணிகள் தொடங்கி உள்ளன.

இதையொட்டி, பேராவூரணி கடைவீதியில், பெரியார் முதன் மைச் சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால், பாதசாரிகள் நடைமேடை அமைத் தல், மின்கம்பங்கள், மின்மாற் றிகளை மாற்றி அமைத்தல் உள் ளிட்ட பணிகள், நெடுஞ்சாலைத் துறை மூலம் மேற்கொள்ளப்படு கின்றன.

இதற்காக, கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக்கொள்ள வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை மூலம் ஏற்கெனவே அறிவிப்பு செய்யப்பட்டு, அதன்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், நேற்று நெடுஞ்சாலைத் துறையினர் சாலையை அளந்து, குறியீடு செய்தனர். தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் மூலம் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்க பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE