திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் ‘சித்திரை வசந்த உற்சவம்’ பந்தக்கால் முகூர்த்ததுடன் நேற்று முன்தினம் மாலை தொடங்கியது.
இதையடுத்து, வரும் 26-ம் தேதி வரை மண்டகபடி உள்ளிட்ட பூஜைகளுடன் நடைபெற்று வருகின்றன. விழாவின் நிறைவாக, தீர்த்தவாரி மற்றும் மன்மத தகனம் போன்ற நிகழ்வுகள் நடை பெறவுள்ளன. இந்நிலையில், சித்திரை வசந்த உற்சவத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று காரணமாக...
இதுகுறித்து அண்ணா மலையார் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், “அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம், ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறும்.
பக்தர்கள் நலன் கருதி....
அதேபோல், இந்தாண்டும் நேற்று முதல் 26-ம் தேதி வரை நடைபெற இருந்த வசந்த உற்சவம், கரோனா தொற்று காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.அரசு வழிகாட்டு நடை முறையின்படி, பக்தர்கள் நலன் கருதி பக்தர்களை அனுமதிக்காமல், மேற்கண்ட நாட்களில் யதாஸ்தானத்திலேயே அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago