கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள திண்டுக்கல் மலைக்கோட்டைக்குச் செல்ல பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மே 15-ம் தேதி வரை மலைக்கோட்டை மூடப்பட்டிருக்கும் என தெரி விக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் நகரில் அமைந் துள்ள மலைக் கோட்டை வரலாற் றுச் சின்னமாக விளங்குகிறது.
தொல்லியல் துறையினர் மலைக்கோட்டையைப் பரா மரித்து வருகின்றனர். தமிழக த்தில் கரோனா பாதிப்பு இரண் டாவது அலை தீவிரம டைந் ததையடுத்து, கரோனா பரவலை தடுக்கும்விதமாக மத்திய அரசின் தொல்லியல் துறை புராதனச் சின்னங்கள் உள்ள இடங்களை மூட உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து திண்டுக்கல்லில் உள்ள மலைக்கோட்டைக்குச் சென்று பார்வையிடப் பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்ப ட்டுள்ளது.
மே 15- ம் தேதி வரை திண்டுக்கல் மலைக்கோட்டைக்குச் செல்ல பார்வையாளர்களுக்குத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago