ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை : டீன் எம்.அல்லி தகவல்

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் வரும் கல்வி யாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என டீன் எம்.அல்லி தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை கட்ட 2019-ல் முதல்வர் அடிக்கல் நாட்டி னார். ரூ.345 கோடியில் பட் டணம்காத்தான் அம்மா பூங்கா அருகே மருத்துவக் கல்லூரி கட்டும் பணி நடந்து வருகிறது. மேலும், மருத்துவமனைக்குப் புதிய கட்டிடங்கள் கட்டும் பணி ஏற்கெனவே நகரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்திலும் நடந்து வருகிறது.

மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக் கட்டிடப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. மாணவர் சேர்க்கை வரும் கல்வியாண்டில் (2021-22) நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி டீன் எம்.அல்லி கூறுகையில், ராமநாதபு ரம் அரசு மருத்துவக் கல்லூரி யில் முதல் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணி யாளர்கள் உள்ளிட்ட 432 பேர் நியமனம் முடிந்துள்ளது.

ஏற்கெனவே மாவட்ட மருத் துவமனையில் பணிபுரிந்த மருத் துவர்களில் 55 பேர் பேராசிரி யர்கள், உதவிப் பேராசிரியர் களாகத் தேர்வு செய்யப்பட்டு ள்ளனர். அதனால், வரும் கல்வி ஆண்டிலேயே ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் முத லாண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுவது உறுதி. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்