திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு : கிராமப்புற மக்கள் ஏமாற்றம்

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால் கிராமப்புற மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா இரண் டாவது அலை தீவிரமாகியுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட அனை வரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதனால் கடந்த ஒரு வாரமாக பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வருகின்றனர். மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்கள், சுகாதா ரத்துறையினர் சார்பில் சிறப்பு தடுப்பூசி முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருவோரின் எண்ணிக்கை நாளு க்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப தடுப்பூசி மருந்து விநியோகம் இல்லை. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கரோனா தடுப்பூசி மருந்து கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவுகிறது.

குறிப்பாக பிள்ளையார்நத்தம், செட்டியபட்டி, சீலப்பாடி உள்ளிட்ட கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வமுடன் வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தற்போது திண் டுக்கல் மாவட்டத்துக்கு தினமும் ஐந்தாயிரம் கரோனா தடுப்பூசி டோஸ் வழங்கப்படுகிறது. அதை விட அதிக எண்ணிக்கையிலான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வருகின்றனர். எனவே, போதிய தடுப்பூசி இல்லாத நிலை உள்ளது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக் கப்பட்டு கூடுதல் தடுப்பூசி மருந்துகள் பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் அனைவருக்கும் தாமதமின்றி தடுப் பூசி செலுத்தப்படும் என்று கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்