மன்னார்குடி அரசு மருத்துவமனையில் - செவித்திறன் பரிசோதனை நிலையம் திறப்பு :

By செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டத்தில் முதன்முறையாக, மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் செவித்திறன் பரிசோதனை நிலையம் நேற்று திறக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை கண்காணிப் பாளர் மருத்துவர் என்.விஜயகுமார் பரிசோதனை நிலையத்தை திறந்துவைத்தார். பரிசோதனை நிலைய மருத்துவர் கிருத்திகா, மகப் பேறு மருத்துவர் ஜி.கவிதா, தொழில்நுட்ப பணியாளர் அருண் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து, நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, அரசு திட்டத்தின் கீழ் காதுகேட்கும் கருவி வழங்கப்பட்டது.

இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் என்.விஜய குமார் கூறியதாவது:

திருவாரூர் மாவட்டத்தில் முதன்முறையாக செவித்திறன் பரிசோதனை நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இனி மன்னார்குடி அரசு மருத்துவ மனையிலேயே செவித்திறன் சிகிச்சையை கட்டணமின்றி பொது மக்கள் பெறமுடியும் என்றார்.

செவித்திறன் பரிசோதனை நிலைய மருத்துவர் கிருத்திகா கூறியது: காதுகேளாதோருக்கு மன்னார்குடி மருத்துவமனையில் ஏற்கெனவே சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தாலும், இந்த பரிசோதனை நிலையம் திறக்கப்பட்டுள்ளதன் மூலம் பிறந்த குழந்தைகள் முதல் அனை வருக்கும் பரிசோதனை செய்யும் வசதி தற்போது கிடைத்துள்ளது.

மேலும், காதுகேளாதோருக்கு சிகிச்சையளித்து காதுகேட்கும் கருவியையும் அரசு திட்டத்தின் மூலம் பெற்றுத் தரும் பணியை இந்த மையம் செய்வதுடன், செவித்திறன் குறைந்தவர்களுக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழும் இந்த மையத்தின் மூலம் வழங்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்