கரோனா பரவல் தடுப்பு முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக தஞ் சாவூர் பெரிய கோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் ஆகியவை நேற்று முதல் மூடப்பட்டன.
கரோனா தொற்றுப் பரவலைத் தொடர்ந்து, மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பாரம்பரிய நினைவுச் சின் னங்கள், கோயில்கள் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை மே 15-ம் தேதி வரை மூட நேற்று முன்தினம் உத்தரவிடப்பட்டது.
அதன்படி, பிரசித்திப்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் நேற்று முன்தினம் இரவு வழக்க மான பூஜைகள் நடைபெற்ற பிறகு கோயில் மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று காலை முதல் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அத்துடன், மராட்டா கோபுரத்தின் நுழைவு வாயிலில், இதுதொடர்பான அறிவிப்பும் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கோயிலுக்கு நேற்று வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
அதே நேரம் கோயில் ஆகமவிதிப்படி தினமும் நான்கு கால பூஜைகள் வழக்கம்போல நடைபெறும் என அற நிலையத் துறை மற்றும் தொல்லி யல் துறையினர் அறிவித்தனர்.
இதேபோல, மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் செயல்படும் கோயில்களான கும்ப கோணம் அருகே தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர், அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில்களும் நேற்றுமுதல் மூடப்பட்டு, பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago