மண்டேலா திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முடிதிருத்தும் தொழிலாளர்கள் தங்கள் சலூன் கடைகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.
மாவட்டம் முழுவதும் பெரும் பாலான சலூன் கடைகளில் கருப்புக் கொடி ஏற்றினர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் முத்துச்சாமி, செயலாளர் சக்திவேல், பொருளாளர் முத்துக்குமார் ஆகியோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
`மண்டேலா திரைப்படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது எங்கள் சமுதாய மக்களின் மனதை மிகவும் புண்படுத்தியுள்ளது. இதுபோன்ற படக்காட்சிகளால் சாதிவன்கொடுமைகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன.
ஆகையால், மண்டேலா படத்தை தடை செய்ய வேண்டும். என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் சங்க பொதுச் செயலாளர் எஸ்.நாகராஜ், துணைத்தலைவர் ஞானசேகர் ஆகியோரும், மண்டேலா திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். அந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஆட்சி யர் அலுவலகத்தில் மனு கொடுத் தனர்.
தென்காசி
முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்க மாவட்டத் தலைவர் ரவி, செயலாளர் பண்டாரசிவன், பொருளாளர் முத்தையா மற்றும் நிர்வாகிகள் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தனர்.அதில், “மருத்துவர் சமுதாய மக்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள் மனதை புண்படுத்தும் வகையில் ‘மண்டேலா’ என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த திரைப் படத்தை தடை செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago