வேலூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் - தினசரி சராசரியாக 6 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி :

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் தினசரி சராசரியாக 6 ஆயிரம் பேர் வீதம் என 35 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். இதற்காக, 45 வயதுக்கு மேற்பட்டோரை வீடு, வீடாகச் சென்று கண்டறியவும், சிறப்பு முகாம்கள் மூலம் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியும் போட்டு வருகின்றனர்.

வியாபாரிகள், தொழிலாளர் கள், அரசு, தனியார் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், சிறு, குறு தொழில் நிறுவன தொழிலாளர்கள், வங்கி பணியாளர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கரோனா தடுப்பூசி செலுத்து வதால் கரோனா தொற்று ஏற்பட்டாலும் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிப்பதும், இறப்பு விகிதமும் குறையும் என கூறப்படுகிறது.

எனவே, 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதுடன் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதி தொடங்கி வரும் 18-ம் தேதிக்குள் சுமார் 18 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கான சிறப்பு முகாம்களின் எண்ணிக்கை தினசரி அதிகரிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதி முதல் நேற்று (ஏப்-16) வரை சுமார் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தினசரி சராசரியாக 6 ஆயிரம் பேர் வீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் நாட்களில் இந்த எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுத்துள் ளதாகவும் தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதி தொடங்கி வரும் 18-ம் தேதிக்குள் சுமார் 18 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்