ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கரோனா - சின்னாளபட்டியில் குடியிருப்பு பகுதிக்கு `சீல்' :

By செய்திப்பிரிவு

சின்னாளபட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் குடியிருக்கும் பகுதிக்கு பேரூராட்சி நிர்வாகம் `சீல்' வைத்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு பரவலாக அதிகரித்து வருகிறது. நேற்று சின்னாளபட்டி வள்ளுவர் நகரில் வசிக்கும் பெண் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவர் குடும் பத்தில் உள்ளவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மேலும் மூவருக்கு கரோனா தொற்று உறுதியானது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் வள்ளுவர் நகருக்குச் செல்லும் சாலையை பேரூராட்சி நிர்வாகம் தகரம் வைத்து அடைத்துள்ளது. மேலும், இப்பகுதிக்கு வெளியாட்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் சுகாதாரத் துறை உதவி இயக்குநரின் நேர்முக உதவியாளர் வல்லவன் தலைமையில் மருத்துவக் குழுவினர் வீடு வீடாகச் சென்று உடல் வெப்பப் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ளோருக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்படுவதோடு, அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வள்ளுவர் நகரில் மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகளை பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி, டாக்டர் நிதி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்