வேலூர் தோட்டப்பாளையம் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் குபேந்திரன் (64). இவர், ஓசூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டருக்கு பயன்படுத்தப்படும் ரூ.32 லட்சம் மதிப்பிலான பேட்டரிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி நேற்று முன்தினம் அதிகாலையில் சென்றார். இந்நிலையில் வேலூர் வந்த அவர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே லாரியை நிறுத்தினார். பின்னர், அவர் வீட்டுக்குச் சென்றவர் அவ்வப்போது வந்து லாரியை பார்த்துச் சென்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் வந்து பார்த்தபோது லாரி காணவில்லை. மர்ம நபர்கள் யாரோ லாரியை திருடிச் சென்றது அவருக்கு தெரியவந்தது.
இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில்,எஸ்பி செல்வகுமார் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, லாரியை மர்மநபர்கள் 2 பேர் திருடிச் சென்ற காட்சி பதிவாகி இருந்தது அதை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், வேப்பங்குப்பம் அருகே கெங்கன பாளையம் என்ற பகுதியில் லாரியை மறைவான இடத்தில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும், அதே பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்களான முருகன் (29), சதீஷ் (35) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago