விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத் தில் உள்ள மைதானத்தில் போலீஸ்பாதுகாப்புடன் இரவில் கன்டெய் னர் லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தன.
விழுப்புரம் ஆட்சியர் அலுவ லகத்தில் உள்ள காவலர் மைதா னத்தில் நேற்று முன்தினம் இரவு 4 வெளிமாநில கன்டெய்னர் லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தன. அவைகள் நேற்று அதிகாலை புறப்பட்டு சென்றது. இதனால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் கேட்டபோது அவர்கள் கூறியது:
கொல்கத்தாவிலிருந்து செல் லாத 25 பைசா நாணய மூட்டைகள் கன்டெய்னர் லாரிகளில் சேலம் உருக்காலைக்கு கொண்டு செல் லப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி அவைகள் இர வில் பயணிக்கக்கூடாது. அதனால் மாலை வேளைகளில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். போலீஸ் பாதுகாப்புடன் இரவு அங்கேயே தங்கி, மறுநாள் காலை புறப்பட்டு செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி கன்டெய்னர் லாரிகள் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் காவலர் மைதானத்தில் நிறுத்தப் பட்டன. நேற்று காலை 5 மணிக்கு அவைகள் சேலம் புறப்பட்டு சென்றன என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago