ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் அம்பேத்கரின் 130-வதுபிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில்,மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜய ராகவன், மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் நல அலுவலர் மற்றும் அலுவலக மேலாளர் பாலாஜி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அதேபோல, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அம்பேத்கர் உருவப் படத்துக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன், ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன்ராஜசேகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மகேஷ்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல, திருவள்ளுவர் சேவா சங்கம் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி வேலூர் ஓல்டு டவுன் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
திருவள்ளுவர் சேவா சங்கத்தின் தலைவர் தர் வரவேற்றார். பொருளாளர் பாஸ்கர் தலைமை வகித்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ஜாதி மறுப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, அன்புடைமை குறித்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில், செயலாளர்கள் நரசிம்மன், ஓய்வுபெற்ற உதவி காவல் ஆய்வாளர் அண்ணாமலை, கவுரவத்தலைவர் டைமன்ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், வேலூர் மாற்றுத் திறனாளிகள் நல சங்கம் சார்பில் காட்பாடி சில்க்மில் அருகே அம்பேத்கரின் பிறந்தநாளை யொட்டி அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அம்பேத்கரின் 130-வது பிறந்த நாளை பொது மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago