ஒரே நாளில் 305 பேருக்கு கரோனா தொற்று :

By செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 305 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 22, 383 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 21,406 பேர்குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 358 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள 619 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 138 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாநகர பகுதியில் மட்டும் 80-க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேலூரில் தங்கியுள்ள வெளிமாநிலத்தவர்கள் 15 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப் பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு உடனடியாக பரிசோதனை செய்யப்படுகிறது. வேலூரில் கரோனா தொற்று அதிகமுள்ளபகுதிகளில் இரும்பு தகடுகள் பொருத்தி கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப் பட்டுள்ளன.

வேலூர் மாவட்டத்தில், கூடுதல்படுக்கை வசதியுடன் மருத்துவ மனைகளில் கரோனா சிறப்பு வார்டுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை, 2 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கரோனா சிறப்பு வார்டுகள் தயாராக உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறையாததால், அனைவரும் கரோனா தடுப்பூசி கட்டாயமாக போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டவர்களும் பொது இடங்களில் கட்டாயமாக முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

கரோனா வேகமாக பரவுவதை தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதேபோல, திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு குறைவாக இருந்த கரோனா பரவல் இந்த ஆண்டு எதிர் பார்க்காத அளவுக்கு உயர்ந் துள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் 79 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவே, அம்மாவட்டத்தில் ஒரே நாளில் பதிவான உச்சபட்ச எண்ணிக்கையாகும். இதன் மூலம் அம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,169-ஆகஉயர்ந்துள்ளது. இதுவரை 128 பேர் உயிரிழந்துள்ளனர்.

119 இடங்கள் கட்டுப்படுத்தப் பட்ட பகுதிகளாக அறிவிக்கப் பட்டுள்ளன. கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் கரோனா தடுப்பூசியை அதிகமாக செலுத்த தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தை பொறுத்தவரை கரோனா பரவல் குறையாமல் உள்ளது. நேற்று ஒரே நாளில் 88 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்துள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்திலும் கரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதாரத்துறையினர் தடுப்பூசி செலுத்துவதை அதிகரித்து வருகின்றனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறையாததால், அனைவரும் கரோனா தடுப்பூசி கட்டாயமாக போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டவர்களும் பொது இடங்களில் கட்டாயமாக முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்