ராமநாதபுரம் - வாக்கு எண்ணும் மையத்தில் : திமுகவினர் கோஷ்டி மோதல் :

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் வாக்கு எண்ணும் மையத்தில் நேற்று திமுகவினர் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராமநாதபுரம் - தேவிபட்டினம் சாலையில் உள்ள அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் வாக்கு எண்ணும் மையத்தை நேற்று பார்வையிட்டார். அங்கு ராமநாதபுரம் ஒன்றியக்குழுத் தலைவர் பிரபாகரன், திமுக நகர் செயலாளர்கள் கார்மேகம், பிரவீன்தங்கம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் குண சேகரன் உள்ளிட்டோர் தங் களது ஆதரவாளர்களுடன் வந்தி ருந்தனர்.

அப்போது வாக்குப் பதிவுக்கு முன்பு வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டியது தொடர்பாக, திமுகவினரிடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் திமுக வைச் சேர்ந்த மணி, குமார் ஆகி யோரிடையே கைகலப்பு ஏற் பட்டு, ஒருவரையொருவர் கடுமை யாகத் தாக்கிக் கொண்டனர்.

அதனையடுத்து அங்கு கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

ராமநாதபுரத்தில் வாக்கு எண் ணிக்கைக்கு முன்பே திமுகவினர் மோதலில் ஈடுபட்ட சம்பவம், மாவட்ட நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் தலைமைக்கு புகார் அனுப்பி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்