ஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்து - மாணவர்கள் செயல்முறை ஒத்திகை :

By செய்திப்பிரிவு

ஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்த செயல் முறை விளக்க ஒத்திகை நிகழ்ச்சி வேலூர் கோட்டையில் என்சிசி மாணவர்கள் சார்பில் நடத்தப்பட்டது.

வேலூர் மாவட்டம் 10-வது பட்டாலியன் என்சிசி மாணவர்கள் சார்பில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதன்படி, என்சிசி மாணவர்கள் சார்பில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தினம், ஓடிக்கொண்டே வழியில் கீழே கிடந்த குப்பையை சேகரித்தல், தூய்மை இந்தியா விழிப்புணர்வு என முப்பெரும் விழா நடத்தப்பட்டது. வேலூர் கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பட்டாலியன் நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் எஸ்.கே.சுந்தரம் தலைமை தாங்கினார். மக்கள் தொடர்பு அலுவலர் ராஜா, லெப்டினன்ட் சஞ்சீவ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வேலூர் மக்கான் சிக்னல் சந்திப்பில் இருந்து ஓடிக்கொண்டே மாணவர்கள் வழியில் கீழே கிடந்த குப்பையை சேகரித்தனர். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான காந்தி சிலை, கோட்டை நுழைவு வாயில் உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து ஜாலியன் வாலாபாக் படுகொலை எவ்வாறு நடைபெற்றது என்பது குறித்து கோட்டையின் ஒரு பகுதியில் செயல்முறை விளக்க ஒத்திகை நிகழ்ச்சியை என்சிசி மாணவர்கள் செய்து காண்பித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்