விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
மல்லாங்கிணர் அருகே உள்ள துலுக்கன்குளம் கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந் நிலையில், துலுக்கன்குளத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி, பிசிண்டி ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி தலைமை யில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடு பட்டனர். அவர்களிடம் மல்லாங்கிணர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். டாஸ்மாக் கடை காலை 7 மணிக்கே திறக்கப்படுவதாகவும், இதனால் மது குடித்துவிட்டு சிலர் பெண்களை கேலி செய்வதாகவும் புகார் தெரிவித்தனர்.
டாஸ்மாக் கடையை அகற்றுவது தொடர்பாக வட்டாட்சியர் அல்லது ஆட்சியரிடம் முறை யாக மனு அளித்தால் உரிய நட வடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago