என்எல்சி நிறுவன கண்காணிப்புத் துறைக்கு - புதிய தலைமை அதிகாரி பொறுப்பேற்பு :

By செய்திப்பிரிவு

என்எல்சி நிறுவன கண்காணிப்புத் துறைக்கு புதிய தலைமை அதி காரி பொறுப்பேற்றார்.

என்எல்சி நிறுவன கண் காணிப்புத் துறையின் தலைமை அதிகாரியாக, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் சென்னை மண்டல டிஐஜியாக பணியாற்றி வந்த எல். சந்திரசேகர் நேற்று முன்தினம் பொறுப்பேற்றார்.

இவர் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் 1996-ம் ஆண்டு வனத்துறை பிரிவில் பட்டம் பெற்றார். டேராடூன் இந்திராகாந்தி தேசிய கல்விக் கழகத்தின் வனஆய்வு நிலையத்தில் பட்டமேற் படிப்பினை 2000-ம் ஆண்டு நிறைவு செய்துள்ளார். தற்போது கோவை வேளாண் பல்கலையில், வனத்துறையில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டு வருகிறார்.

வனங்கள் தொடர்பான சிறப்புப் பயிற்சிகளைப் பெறுவதற்காக சந்திரசேகர் அமெரிக்க ஐக்கிய நாடுகள்,பின்லாந்து மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு சென்றுள்ளார். மேலும் அமெரிக்க நாட்டின் சைராக்கியூஸ் பல்கலையின் மேக்ஸ்வெல் பொதுநிர்வாக கல்வியகத்தில் பொது நிர்வாகம் குறித்து சிறப்பு பயிற்சி பெற்றவர்.

திருச்சியைச் சேர்ந்த சந்திரசேகர் 1997-ம் ஆண்டு இந்திய வனத்துறை பணிக்கு தேர்வு செய்யப்பட்டார். கேரள மாநிலவனத்துறையில் திருச்சூர் வனக்கோட்டத்தில் உதவி துணை வனக் கட்டுப்பாட்டு அலுவலராக பணியைத் தொடங்கினார்.

துணை வனக் கட்டுப்பாட்டு அலுவலராக பதவி உயர்வு பெற்று கோத்தமங்கலம், பாலக்காடு, அமைதி பள்ளத்தாக்கு தேசிய பூங்கா, வடக்கு வயநாடு மற் றும் பரம்பிக்குளம் புலிகள் பாதுகாப்பு பகுதிகளில் கோட்ட வன அலுவலராகப் பணியாற்றி யுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்