விழுப்புரம், விருத்தாசலம், கடலூர் மாவட்டங்களில் - அரக்கோணம் கொலை விவகாரம்: விசிகவினர் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

கடலூர், விழுப்புரம், கள்ளக் குறிச்சி, விருத்தாசலம் பாலக் கரையில், மக்கள் அதிகாரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும்விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

அரக்கோணத்தை அடுத்தசோகனூரில் விடுதலைச்சிறுத் தைகள் கட்சிக்கு அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அர்ஜூனன், சூரியா ஆகியோர் வாக்குகள் கேட்டுள்ளனர். இதற்கு சிலர் எதிர்ப் புத் தெரிவித்து அவர்களை தாக்கி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தைக் கண்டித்து விருத்தாசலம் பாலக்கரை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் அசோகன் தலைமையில் நேற்றுகண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது கொலை சம் பவத்தில் தொடர்புடையவர்களை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து குண்டர் தடுப்புக் காவலில் வைக்க வேண்டும். கொலையானவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலையும் இழப்பீட்டுத் தொகையும் வழங்கவேண் டும் என வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம்அமைப்பின் ராஜூ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதே போல் விடுதலைச்சிறுத் தைகள் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் அக்கட் சியின் பொதுச்செயலாளர் சிந்த னைசெல்வன் தலைமையில் நேற்றுகண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

விழுப்புரம்

விழுப்புரம் ஆட்சியர் அலுவ லகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஆற்றலரசு,தமிழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதே போல் கடலூரில் விடு தலைச் சிறுத்தைகள் கட்சியினர் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் ஆகி யோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூர் நகர செயலாளர் செந்தில் முன்னிலை வகித்தார். மாநில அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் திரு மார்பன்,மாநில துணை பொது செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். மாநில நிர்வாகிகள் பழனிவேல், தர், குனத்தொகையன், முரளி, ஜவகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் கோரிக்கைகள் குறித்து முழக்கங்கள் எழுப் பப்பட்டது. இது போல சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்