திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் 63 கவுரவ விரிவுரையாளர்களிடம், "10 நாட்களுக்கு வேலைக்கு வர வேண்டாம். கூப்பிடும் போதுவேலைக்கு வரலாம்". இது பல்கலைக்கழகத்தின் வாய்மொழிஉத்தரவு எனக் கல்லூரி முதல்வர் நாகலட்சுமி கூறியுள்ளார். இதையடுத்து உடனடியாக தொகுப்பூதியம் வழங்க வேண்டும்.4 மாத ஊதிய பாக்கியை வழங்க வேண்டும் என கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் மற்றும் கல்லூரி முதல்வர் நாகலட்சுமி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதை யடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago