திருவண்ணாமலை மாவட்டத்தில் - 20 ஆயிரத்தை கடந்தது : கரோனா தொற்று பாதிப்பு : ஒரே வாரத்தில் 2 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு என்பது கடந்த 5 மாதங்களாக மிகவும் குறைந்திருந்ததாக சுகாதாரத் துறை தெரிவித்தது. ஒற்றை இலக்கில் கூட பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இருந்துள்ளதாக, சுகாதாரத் துறையினர் வெளியிட்ட பட்டியலில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரம் சூடுபிடித்தது. தலைவர்களின் பிரச்சாரத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் கூடினர். நாடு முழுவதும் அமலில் உள்ள கரோனா தடுப்புக்கான சட்ட விதிகள் மீறப்பட்டன.

இதற்கிடையில், கரோனா தொற்று பாதிப்பு என்பது கடந்த 7 நாட்களாக திடீரென அதிகரித்துள்ளது. திருவண்ணா மலை மாவட்டத்தில் கடந்த 1-ம் தேதி வெளியிடப்பட்ட பட்டியலில் 10 பேரும், 2-ம் தேதி வெளியிடப்பட்ட 13 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். அப்போது, கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19,726-ஆக இருந்தது. 7 நாட்களில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதன்பிறகு, பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயரத் தொடங் கியது. 8-ம் தேதி வெளியிடப்பட்ட பட்டியலில் 42 பேர் என்றிருந்த நிலையில், 9-ம் தேதி (நேற்று) வெளியிடப்பட்ட பட்டியலில் 69 பேர், கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 20,041–ஆக அதிகரித்துள்ளது. இவர்களில், 19,443 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

310 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் சிகிச்சை பலனின்றி 288 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிக்க சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்