கிருஷ்ணகிரி பகுதியில் - கோழிக்கொண்டை பூ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் :

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரியில் கோழிக் கொண் டை பூ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், சூளகிரி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோழிக் கொண்டை பூக்கள் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக கோழிக்கொண்டை பூக்கள் மாலைகளில் அழகு சேர்க்க பயன்படுத்தப்படுகிறது. திருமணம், விழாக்காலங்களில் இவ்வகையான பூக்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இவ்வகையான பூக்கள் சாகு படியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறும்போதும், நாற்றுவிட்டு, பூ செடி நடவு செய்கிறோம். 3 மாதங்களில் பூக்கள் வருகிறது. ஒரு ஏக்கருக்கு நடவு செய்யப்படும் செடிகளிலிருந்து அதிகபட்சம் 1500 கிலோ பூக்கள் வரை கிடைக்கிறது. குறுகியகால பயிர்கள் பயிரிடும்போது, தண்ணீர் பற்றாக்குறை இருந்தாலும் சமாளிக்க முடியும்.

தற்போது நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ள நிலையிலும், ஆழ்துளை கிணறுகளில் கிடைக்கும் தண்ணீர் போதுமானதாக இருக்கிறது. கோழிக்கொண்டை பூக்களை பொறுத்தவரை சாதாரண நாட்களில் கிலோவிற்கு ரூ.20 முதல் ரூ.25 வரை கிடைக்கிறது. இங்கிருந்து சரக்கு வாகனம், பேருந்து மூலம் பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு சீசனை பொறுத்து விலை நிர்யணம் செய்யப்படுகிறது. கிலோ ரூ.40 முதல் ரூ.60 வரை விற்பனையாகிறது. தற்போது உள்ளூரில் தேவை இருப்பதால், இங்கேயே கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்கிறோம். சீசன் காலங்களில் கூடுதல் விலை கிடைக்கும். இதனால் விவசாயிகள் பலர் கோழிக்கொண்டை பூ சாகுபடியில் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்