சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் மருந்து, மாத்திரை வழங்குவதில் மருத்துவப் பணியாளர்கள் அஜாக்கிரதையாக செயல்படுவதால், கரோனா நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் கரோனா தொற்றால் 160-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா முதல் அலை வீசியபோது நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதேபோல் மாவட்ட நிர்வாகம் ஏற்பாட்டில் நோயாளிகளுக்கு டீ, சூப், வாழைப்பழம், கொண்டக்கடலை, மூன்று வேளை உணவு முறையாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது கரோனா 2-வது அலை வீசத் தொடங்கிய நிலையில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் சரியாக சிகிச்சை அளிப்பதில்லை எனவும், சுகாதாரம் படுமோசமாக உள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கரோனா வார்டில் சிகிச்சை பெற்ற ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சர்க்கரை நோய் இல்லாமலேயே இன்சூலின் ஊசி செலுத்த மருத்துவப் பணியாளர்கள் முயன்றுள்ளனர். கடைசி நேரத்தில் உண்மை தெரிந்து ஊசி போடுவது தவிர்க்கப்பட்டது.
கழிப்பறையை சுகாதாரப் பணியாளர்கள் தினமும் சுத்தம் செய்யாததால் துர்நாற்றம் வீசுகிறது. அதேபோல் உணவும் முறையாக வழங்கப்படவில்லை. இதனால் கரோனா நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கரோனா நோயாளிகள் சிலர் கூறியதாவது: கடந்த காலங்களில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சுகாதாரமும், சிகிச்சையும் தனியாருக்கு இணையாக சிறப்பாக இருந்தது. தற்போது சுகாதாரம் படுமோசமாக உள்ளது. அதேபோல் மருந்து, மாத்திரை வழங்குவதிலும் அஜாக்கிரதையாக உள்ளனர்.
கரோனா வார்டான 207, 208-ல் கழிப்பறைகளை சுத்தம் செய்யாததால், அங்கு தங்குவதற்கே மிகுந்த சிரமமாக உள்ளது. இதுகுறித்து மருத்துவப் பணியாளர்களிடம் தெரிவித்தாலும் கண்டுகொள்வதில்லை என்று கூறினர்.
இதுகுறித்து மருத்துவக் கல் லூரி டீன் ரத்தினவேல் கூறுகை யில், ஒரே பெயரில் இருவர் இருந் ததால் இன்சூலின் ஊசி செலுத் துவதில் குழப்பம் ஏற்பட்டது.
ஆனால் சர்க்கரை நோய் இல்லாதவருக்கு ஊசி செலுத்த வில்லை. சிலர் டீ வேண்டாம் என்று கூறியதால், அவர்களுக்கு டீ வழங்கவில்லை. ஆனால் கரோனா நோயாளிகள் அனை வருக்கும் உணவு முறையாக வழங்கப்படுகிறது என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago