சிவகங்கையில் இறுதி வாக்குப்பதிவு விவரம் : 4 தொகுதிகளிலும் மொத்தம் 69.02 சதவீத வாக்குப்பதிவு

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உத்தரவையடுத்து இறுதி வாக்குப் பதிவு விவரத்தை தேர்தல் பிரிவு அலுவலர்கள் வெளியிட்டனர்.

ஏப்.6-ல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் சிவகங்கை மாவட்டத்தின் 4 தொகுதிகளுக்கான உத்தேச வாக்குப்பதிவு விவரம் வெளியிடப்பட்டது. இதில் சிவகங்கை தொகுதியில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்குகளின் கூட்டல் கணக்கில் குளறுபடி ஏற்பட்டதால் இறுதி வாக்கு விவரங்கள் நேற்று காலைதான் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டன. ஆனால், அதன் பின்பும் செய்தியாளர்களுக்கு இறுதி வாக்குகள் விவரத்தை வழங்க தேர்தல் பிரிவு அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் இறுதி வாக்கு கள் விவரத்தை தேர்தல் பிரிவினர் வழங்கினர்.

காரைக்குடி தொகுதியில் 1,55,690 ஆண்கள், 1,61,303 பெண் கள், 48 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 3,17,041 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 98,110 ஆண்கள், 1,11,857 பெண்கள், 6 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,09,973 பேர் வாக்களித்துள்ளனர். இது 66.23 சதவீதம்.

திருப்பத்தூர் தொகுதியில் 1,42,800 ஆண்கள், 1,48,865 பெண்கள், 12 மூன்றாம் பாலினத் தவர் என மொத்தம் 2,91,677 வாக் காளர்கள் உள்ளனர். இதில் 96,281 ஆண்கள், 1,13,676 பெண்கள் என மொத்தம் 2,09,957 பேர் வாக்க ளித்துள்ளனர். இது 71.98 சதவீதம்.

சிவகங்கை தொகுதியில் 1,47,789 ஆண்கள், 1,52,842 பெண்கள், 3 மூன்றாம் பாலினத் தவர் என மொத்தம் 3,00,634 வாக் காளர்கள் உள்ளனர். இதில் 91,771 ஆண்கள், 1,07,511 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 1 என மொத்தம் 1,99,283 பேர் வாக்களித் துள்ளனர். இது 66.29 சதவீதம்.

மானாமதுரை (தனி) தொகுதியில் 1,36,826 ஆண்கள், 1,40,936 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 2,77,763 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 95,527 ஆண்கள், 1,04,613 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 2,00,141 பேர் வாக்களித்துள்ளனர். இது 72.05 சதவீதம்.

சிவகங்கை மாவட்டத்தில் 5,83,105 ஆண்கள், 6,03,946 பெண் கள், 64 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 11,87,115 வாக்கா ளர்கள் உள்ளனர். இதில் 3,81,689 ஆண்கள், 4,37,657 பெண்கள், 8 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 8,19,354 பேர் வாக்களித் தனர். இது 69.02 சதவீதம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE