பாரதிதாசன் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் மாமன்னன் கரிகால் சோழனின் முழு வரலாற்றையும் பாடமாக வைக்க வேண்டுமென கரிகாலன் வரலாற்று ஆய்வு மைய நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம், பதிவாளர் கோபிநாத் ஆகியோரிடம் ஆய்வு மைய நிறுவனர் ஆதலையூர் சூரியகுமார் நேற்று முன்தினம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கரிகால் சோழ மன்னன் உலக மன்னர்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக திகழ்ந்தவர். தன்னுடைய எல்லைகளை விரிவுபடுத்தி சோழ தேசத்தின் பெருமையை உலக அளவில் நிலைநாட்டியவர். மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்டு நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தும் பல்வேறு பணிகளை மேற்கொண்டவர். தொழில்நுட்பம் என்ற ஒன்றே தொடங்காத காலத்தில் காவிரியில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த கல்லணை கட்டியது, விவசாயிகளின் மீது கரிகாலன் கொண்டிருந்த அக்கறைக்கு சான்றாக உள்ளது.
இப்படிப்பட்ட மன்னனின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாகப் படிப்பது என்பது எதிர்கால தலைமுறைக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே, பாரதிதாசன் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் கரிகால் சோழனின் முழு வரலாற்றையும் பாடமாக வைக்க வேண்டும் எனக் கூறி யுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago