ஈரோடு ரயில்நிலையத்தில் - பயணசீட்டு முன்பதிவு முறை மாற்றத்துக்கு எதிர்ப்பு :

By செய்திப்பிரிவு

ஈரோடு ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு முன்பதிவிற்காக மூன்று கவுன்டர்கள் செயல்பட்டு வந்தன. கரோனா பரவலால் ரயில்கள் இயக்கம் குறைந்த நிலையில், இதில் ஒரு கவுன்டர் மூடப்பட்டு, இரண்டு மட்டும் செயல்பட்டு வருகின்றன. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து முன்பதிவு செய்யும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் இரு நாட்களுக்கு முன்னர் ஒரு கவுன்டரில் மட்டும் ரொக்கம் செலுத்தி பயணிச்சீட்டு முன்பதிவு செய்யும் வகையிலும், மற்றொரு கவுன்டரில் வங்கி ஏடிஎம் அட்டைகளைக் கொண்டுமுன்பதிவு செய்யும் வகையிலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினர் கே.என்.பாஷா தெரிவித்துளார்.

நீண்ட நேரம் காத்திருப்பு

இதுகுறித்து அவர் கூறியதாவது

ஈரோடு ரயில் நிலையத்தில் ஏற்கெனவே ஒரு முன்பதிவு மையம் மூடப்பட்டு இரண்டு மட்டும் செயல்படுகிறது. இதில் ஒன்றில் மட்டும் ரொக்கம் செலுத்தி பயணச்சீட்டு பெறும் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

பெரும்பாலான பயணிகள், ரொக்கம் செலுத்தி முன்பதிவு செய்யவே ரயில் நிலையம் வருகின்றனர். வங்கி ஏடிஎம் பயன்படுத்துவோர், இணையம் மூலமே தங்கள் பயணச்சீட்டை முன்பதிவு செய்து கொள்கின்றனர். எனவே, இரு மையங்களிலும் ரொக்கம் மற்றும் ஏடிஎம் கார்டு என பயணிகள் விருப்பப்படி கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்