கடலூர் வட்டாரம் நத்தப்பட்டு கிராமத்தில் பழ மரங்களில் கிளை அமைப்பு மேலாண்மை முறை குறித்த செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது. முன்னோடி விவசாயி சண்முகம் நிலத்தில் நடைபெற்ற செயல்விளக்க நிகழ்ச்சியில் கடலூர் வேளாண் உதவி இயக்குநர் பூவராகன் கலந்து கொண்டு பேசியது: மா மரங்களின் மேற்பரப்பில் உள்ள கிளைகள் சூரிய ஒளி விரிவாக படரும் வண்ணம் அமைப்பதால் மகசூல் அதிகரிப்பதுடன் பழங்களின் நிறம் மற்றும் சுவை மேம்பாடு அடையும். உயரமான மரங்களை விட கட்டுக்கோப்பான சிறிய மரங்கள் சூரிய ஒளியை நன்கு கிரகித்து பழ உற்பத்தியை அதிகரிக்க செய்கின்றன. மேற்புற மரக்கிளைகள் மிகவும் அடர்த்தியாக இருக்கும் போது சூரிய ஒளியை உட்புகா வண்ணம் தடை ஏற்படுத்துவதால் மகசூல் குறைவதுடன் பூச்சி நோய் தாக்குதலுக்கு ஏற்ற சூழ்நிலையை உண்டாக்குகின்றன். இதை தவிர்க்க முறையாக அறிவியல் முறைப்படி மரக்கிளை வடிவமைப்பை ஏற்படுத்துவது முக்கியமானது ஆகும் என்றும் விளக்கினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago