போடி தொகுதியில் 76.30% வாக்குகள் பதிவானது : கம்பத்தில் குறைந்த வாக்குகள்

By செய்திப்பிரிவு

தேனி மாவட்டத்தில் 72.60 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. 4 தொகுதிகளில் போடியில் அதிக வாக்குகளும், கம்பத்தில் குறைவான வாக்குகளும் பதிவாகி உள்ளன.

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் உள்ளிட்ட 4 தொகுதி வாக்காளர் களுக்காக 1,561 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

நேற்று முன்தினம் இரவு 7 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் மின்னணு இயந்திரங்கள் கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்குக் கொண்டு வரப்பட்டன.

ஆனால், மலைக் கிராமங்களான ஊரடி, ஊத்துக்காடு, டாப் ஸ்டேஷன் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்களை குதிரை மூலம் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், நேற்று காலையில்தான் மலை கிராம வாக்கு இயந்திரங்கள் வந்தன. மேலும் தகவல் தொடர்பில் ஏற்பட்ட குளறுபடியால் வாக்குப்பதிவு சதவீதத்தை நேற்று முன்தினம் முழுமையாகப் பெற முடியாத நிலை இருந்தது. நேற்று முழுமையான வாக்குப்பதிவு விவரங்கள் பெறப்பட்டன. இதன்படி ஆண்டிபட்டியில் 74.85% பெரியகுளத்தில் 69.94% போடியில் 76.30%, கம்பத்தில் 69.51% வாக்குகள் பதிவாகின. மாவட்ட அளவில் 72.60% வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ஹெச்.கிருஷ்ணன் உன்னி தெரிவித்தார்.

போடியில் கூடுதல் வாக்குகளும், கம்பத்தில் குறைவான வாக்குகளும் பதிவாகி உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்