மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் வைக்கப்பட்டுள்ள சித்தோடுஐஆர்டி கல்லூரி மற்றும் கோபி கலை அறிவியல் கல்லூரியில்128 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப் படுவதாக மாவட்ட தேர்தல் அலுவலர் சி.கதிரவன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப் பட்ட, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்காளர்கள் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் இயந்திரம் ஆகியவை சித்தோடு சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரியில்,அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், தொடர்பு டைய சட்டப்பேரவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு இருப்பறையில் வைக்கப் பட்டுள்ளன. இவற்றைமாவட்ட தேர்தல் அலுவலர் சி.கதிரவன் மற்றும் பொதுப் பார்வையாளர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலர் சி.கதிரவன் கூறியதாவது
சித்தோடு சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், கோபி கலை அறிவியல் கல்லூரியில் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்று அடுக்கு பாதுகாப்புடன், தனி அறையில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக வைக்கப்பட்டு, சீல் இடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையத்தில்பாதுகாப்பு பணிக்கு ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 8 அலுவலர் கள் வீதம் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணும் மையத்தினை கண்காணிக்க சித்தோடு ஐஆர்டி கல்லூரியில் 96 சிசிடிவி கேமராக்களும், கோபி கலை அறிவியல் கல்லூரியில் 32 சிசிடிவி கேமராக்களும் என மொத்தம் 128 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தலா 8 வீதம் 16 எல்.இ.டி. தொலைக்காட்சிகள் மூலம் கண்காணிக்கப் பட்டு வருகிறது. மேலும், துணை ராணுவத்தினர் மற்றும் காவல் துறையினர் 500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
இந்த ஆய்வில் எஸ்பி தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் மற்றும் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago