நாமக்கல் மாவட்டத்தில் 78.18 சதவீதம் வாக்குப்பதிவு :

By செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

மேலும், நாமக்கல்லில் 2 பேர், ராசிபுரத்தில் ஒருவர், பரமத்தி வேலூரில் 3 பேர் என கரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் நேற்று வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து காவல் துறையினர் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

வாக்குப்பதிவின் முடிவில் மாவட்டம் முழுவதும் உத்தேசமாக 78.18 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 82.19 சதவீதம், நாமக்கல் 78.54 சதவீதம், சேந்தமங்கலம் 72.40, திருச்செங்கோடு 76.27, பரமத்தி வேலூர் 81.3, குமாரபாளையம் 78.81 சதவீத வாக்குகள் என மொத்தம் 78.18 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஈரோட்டில் 76.91 சதவீதம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிவில் மொத்தம் 76.91 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்