பாமணி உணவு தானியக் கிடங்கை முற்றுகையிடச் சென்ற விவசாயிகள் கைது :

By செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பாமணியில் உள்ள உணவு தானியக் கிடங்கை முற்றுகையிடச் சென்ற 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

பஞ்சாப், ஹரியாணா மாநிலங் களில் விளைபொருட்களை கொள் முதல் செய்வதை கைவிட்டு, மத்திய அரசு உணவுக் கிடங்குகளை திறக்காமல் மூடிவைத்துள்ளது.

இதை எதிர்த்து அம்மாநில விவசாயிகள் கிடங்குகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த நாடுதழுவிய அளவில் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பாமணியில் உள்ள உணவு தானியக் கிடங்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நேற்று முன்தினம் அறிவித்தார்.

இதையடுத்து, மன்னார்குடி பந்தலடியில் நேற்று 50-க்கும் மேற்பட்ட விவ சாயிகளுடன் ஒன்றுகூடி பேரணியாகச் சென்று பாமணி தானியக் கிடங்கை முற்றுகையிட புறப்பட்டனர். அவர்களை சார் பதிவாளர் அலுவலகம் முன்பு போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் அந்த இடத்திலேயே பிஆர்.பாண்டியன் மற்றும் அவருடன் வந்த விவசாயிகள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அனைவரையும் கைது செய்வதாக போலீஸார் அறிவித்து, விவசாயிகளை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்