திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் 9,762 பேர் : ஆட்சியர் வே.சாந்தா தகவல்

By செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இன்று (ஏப்.6) நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் 9,762 பேர் ஈடுபட உள்ளனர்.

இதுதொடர்பாக திருவாரூர் ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரான வே.சாந்தா திருவாரூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

2021 சட்டப்பேரவை பொதுத்தேர்தலையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப் பூண்டி(தனி) தொகுதியில் 336 வாக்குச்சாவடிகள், மன்னார்குடி தொகுதியில் 357 வாக்குச் சாவடிகள், திருவாரூர் தொகுதியில் 388 வாக்குச்சாவடிகள், நன்னிலம் தொகுதியில் 373 வாக்குச் சாவடிகள் என மொத்தம் 1,454 வாக்குச்சாவடிகளில் இன்று (ஏப்.6) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மாவட்டத்தில் 181 வாக்குச் சாவடிகள் பதற்றமான வாக்குச்சா வடிகளாகவும், ஒரு வாக்குச்சாவடி மிகவும் பதற்றமான வாக்குச்சாவடியாகவும் கண்டறியப்பட்டுள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில் 5,16,177 ஆண் வாக்காளர்கள், 5,38,372 பெண் வாக்காளர்கள், 69 இதரர் என மொத்தம் 10,54,618 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மாவட்டத்துக்குட்பட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளை யும் சேர்த்து 49 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலை யொட்டி 9,762 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், கரோனா தொற்று, அதிக வெப்பநிலை நிலவும் இக்காலத்தை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் சிரம மின்றி வாக்களிக்க அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்