கரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என திருவாரூர் ஆட்சியர் வே.சாந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தெரிவித்துள் ளது: கரோனா தொற்று நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நட வடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்களும் ஒத்துழைப்பை வழங்கி தங்கள் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும். அனைவரும் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறும்முன் முகக்கவசம் அணிவது கட்டாயம். அதே போன்று நாம் அனைவரும் அனைத்து இடங்களுக்கும் செல்லும்போதும், திரும்பும் போதும் சோப்பை கொண்டு நன்றாக 20 விநாடிகள் கைகளை கழுவ வேண்டும். கைகளை கழுவ முடியாத சமயங்களில் சானிடைசர் பயன்படுத்த வேண்டும்.
சமூக இடைவெளியை அனைத்து இடங்களிலும் கடைபிடிக்க வேண்டும். நம்மை சுற்றியுள்ள ஒவ்வொருவரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நாளை (இன்று) சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. எனவே, அனைவரும் அரசின் வழிகாட்டு முறைகளை கடைபிடித்து பாதுகாப்பாக வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளன. வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும்.
மேலும், வெயில் அதிகரித்து வருவதால் வெளியில் செல்வதை குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் தவிர்க்க வேண்டும். உடல் வெப்ப மடைவதை தவிர்க்க, சர்க்கரை, உப்புநீர் கரைசல், இளநீர் மற்றும் நீர் ஆகாரங்களை அதிகமாக எடுத்துக்கொண்டு பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago