நெய்வேலி தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் ஜெகன் கூட்டணி கட்சியினருடன் சென்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட் டார்.
என்எல்சி ஆர்ச் கேட் பகுதியில் அவர் பேசியதாவது:
தொகுதியின் மண்ணை சார்ந்த வன் என்ற அடிப்படையில், இங்கு நிலவும் மக்களின் அத்தியாவசிய தேவைகனை நன்கறிவேன். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், ஊராட்சி நிர்வாகத்தை வெற்றிகரமாக கொண்டு சென்ற எனக்கு, சட்டமன்ற பதவியையும் மக்களின் தேவைக்காக நெறிமுறையோடு பயன்படுத்தி தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக நெய்வே லியை அடையாளப் படுத்துவேன்.
இன்றைய சூழலில் கொள்கை, கோட்பாடு ஆகியவற்றை மட்டும் கொண்டு மக்களின் அன்பை பெறுவது மிகப்பெரும் சவால். அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவன். எனது சமுதாய பணிகளை அங்கீகரித்து, என்னையும் ஏற்றுக்கொண்ட நெய்வேலி தொகுதி வாக் காளர்களை மீண்டும் வணங் குகிறேன்.
நான் தொகுதியின் மேம் பாட்டுக்காக அளித்துள்ள வாக்கு றுதிகள் அனைத்தும் மக்களின் உயிர்நாடி தேவைகள். நான் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் அவற்றை நிறைவேற்றும் வழிவகைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வேன்.
தொகுதியில் உள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், விவசாயிகளின் வாழ்வாதாரம், என்எல்சி நிறுவன பிரச்சினைகள் அனைத்தையும் உயிர்மூச்சாக கருதி தீர்ப்பதற்கான வழிகனை மேற்கொள்வேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago