திருவாடானை தொகுதி பறக்கும்படை வாகனத்தை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்திய காரின் உரிமையாளர், ஓட்டுநர் ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் அருகே வழுதூர் ரயில்வே கேட் பகுதியில் திருவா டானை தொகுதி பறக்கும் படை குழு எண்.3 என்ற வாடகை வாக னத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் செல்வதை நேற்று முன்தினம் மாலை திருவாடானை, பரமக்குடி தொகுதிகளுக்கான தேர்தல் செலவினப் பார்வையாளர் சவுரவ் துபே பார்த்துள்ளார்.
உடனடியாக அவர் அருகிலிருந்த ராமநாதபுரம் தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் தெரிவித்து, வாகனத்தைச் சோதனையிடச் செய்தார்.
பறக்கும்படை அலுவலர் அண்ணாதுரை தலைமையிலான அலுவலர்கள் நடத்திய சோதனையில், திருவாடானை பறக்கும்படை வாடகை வாகனத்தின் உரிமையாளரான தேவிபட்டினத்தைச சேர்ந்த ஜோசப் அமலன் நியூட்டன்(48), தனது குடும்பத்தினருடன் தேவிபட்டினத்தில் இருந்து முத்துப்பேட்டைக்குச் சென்றதும், பறக்கும்படை வாகனம் 8 மணி நேரம் பணி முடிந்து, ஓய்வில் இருந்தபோது அதை பயன்படுத்தியதும் தெரிய வந்தது.
இருந்தபோதும் பறக்கும் படைக்கு வாடகைக்கு அளித்து விட்டு, அந்த வாகனத்தை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியது விதிமீறல் என பறக்கும்படை அலுவலர் அண்ணாதுரை கேணிக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித் தார்.
அதன்பேரில் அந்த வாகனத்தின் உரிமையாளர் ஜோசப் அமலன் நியூட்டன், கார் ஓட்டுநர் கழனிக்குடி தங்க ஈஸ்வரன் (26) ஆகிய இருவர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர்.
பின்னர் அவர்களை காவல்நிலைய ஜாமீனில் விடு வித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago