ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசின் உத்தரவை மீறி சனிக்கிழமை விடுமுறை அளித்த 21 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பள்ளி கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி வாரத் தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பள்ளிகள் செயல்பட அறி வுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று புனிதவெள்ளி அரசு விடுமுறையால் சில பள்ளிகள் அடுத்த நாளான ஏப்ரல் 3 சனிக்கிழமையும் முதன்மைக் கல்வி அலுவலரின் அனுமதி பெறாமல் விடுமுறை அறிவித்துள்ளது கல்வித்துறைக்கு தெரிய வந்தது. இதுபோன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் 21 பள்ளிகள் கடந்த சனிக்கிழமை விடுமுறை அளித்துள்ளன.
இந்த பள்ளிகள் மீது தமிழ்நாடு குடிமைப்பணி ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு விதியின் கீழ் ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க தவறினால் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago