ராமநாதபுரத்தில் : தேர்தல் பாதுகாப்பு பணியில் 3300 பேர் :

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளிலும் போலீஸார், துணை ராணுவப் படையினர் உள்ளிட்ட 3300 பேர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1647 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 228 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.

உள்ளூர் போலீஸார் 1900 பேர், துணை ராணுவப் படையினர் 412 பேர், உள்ளூர் ஊர்க்காவல் படையினர் 345 பேர், பெங்களூருவிலிருந்து வந்த ஊர்க்காவல் படையினர் 100 பேர், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் 22 பேர், தெலங்கானா பயிற்சி போலீஸார் 50 பேர், ஓய்வு பெற்ற ராணுவத்தினர் 275 பேர் உள்ளிட்ட 3300 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பாதுகாப்புப் படை யினருக்கான பணி ஒதுக்கீடு ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. மாவட்டக் காவல் கண் காணிப்பாளர் இ.கார்த்திக் பாதுகாப்புப் படையினருக்கான பணியிட ஒதுக்கீட்டை ஆய்வு செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்