திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு 7 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றது.
தி.மலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதி களில் 122 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்கள், அனைவரும் கடந்த 2 வாரங் களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களது தேர்தல் பிரச்சாரம் நேற்று இரவு 7 மணியுடன் நிறைவு பெற்றது.
திருவண்ணாமலை காந்தி சிலை அருகே தனது தேர்தல் பிரச்சாரத்தை முன்னாள் அமைச்சரும், திமுக வேட்பாளரு மான எ.வ.வேலு நிறைவு செய்தார். இதேபோல், பாஜக வேட்பாளர் தணிகைவேல், காமராஜர் சிலை அருகே பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
மேலும், ஆரணியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனும் மற்றும் திமுக வேட்பாளர் அன்பழகனும், கலசப்பாக்கத்தில் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் எம்எல்ஏ மற்றும் திமுக வேட்பாளர் சரவணனும், போளூரில் அதிமுக வேட்பாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் திமுக வேட்பாளர் சரவணன் ஆகியோர் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர். செங்கம், செய்யாறு, வந்தவாசி மற்றும் கீழ்பென்னாத்தூரில் அந்தந்த திமுக மற்றும் அதிமுக, பாமக வேட்பாளர்கள் பிரச் சாரத்தை நிறைவு செய்தனர்.
இதேபோல், திருவண்ணா மலை மாவட்டத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, அமமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், இந்திய ஜனநாயக கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரத்தை நிறைவு செய்துள்ளனர். இதையடுத்து, சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை(6-ம் தேதி) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணிக்கு நிறைவு பெறுகிறது.
தி.மலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 122 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்கள், கடந்த 2 வாரங் களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களது தேர்தல் பிரச்சாரம் நேற்றிரவுநிறைவு பெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago