சென்னை-மதுரை இடையே அதிவேக தேஜஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் திருச்சி, கொடைரோடு ரயில் நிலையங்களில் மட்டும் நின்று சென்றது. திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று சென்றால் திண்டுக்கல், தேனி மாவட்டப் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என திண்டுக்கல் வர்த்தகர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி ஆகியோர் ரயில்வே நிர்வாகத்துக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ஏப்.2 முதல் அக்டோபர் 2 வரை ஆறு மாதங்களுக்கு சோதனை முறையில் தேஜஸ் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதன்படி சென்னை-மதுரை தேஜஸ் ரயில் முதன் முறையாக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நேற்று காலை 11.03 மணிக்கு வந்து நின்றது. வர்த்தகர்கள், லயன்ஸ் சங்கத்தினர் மலர் தூவி வரவேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago