விருதுநகர் மாவட்ட வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த - கரோனா தடுப்பு உபகரணங்களை பிரித்து அனுப்பும் பணி :

By செய்திப்பிரிவு

சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவின்போது வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தக் கூடிய கரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் கிருமி நாசினியை பிரித்து வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி விருதுநகரில் நேற்று தொடங்கியது.

விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், வில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய 7 தொகுதிகளில் மொத்தம் 2,370 வாக்குச்சாவடிகள் உள்ளன. இம்மாதம் 6-ம் தேதி சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவின்போது வாக்குச்சாவடி களில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்களுக்கு கரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் வாக்குப்பதிவின்போது மாவட்டத்திலுள்ள 7 தொகுதி களுக்கு உட்பட்ட 2,370 வாக்குச் சாவடி மையங்களுக்கு மொத்தம் 2,370 தெர்மல் ஸ்கேனர்கள், 14,220 (500 மி.லி.) மற்றும் 26,070 (100 மி.லி.) கிருமிநாசினி, 26,070 முகக்கவசங்கள், 1,56,420 மூன்ற டுக்கு முகக்கவசங்கள், 71,100 ஈரடுக்கு முகக்கவசங்கள், 78,210 கையுறைகள், 18,96,000 பாலிதீன் கையுறைகள், 30,810 முழு கவச உடை ஆகிய உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன.

இவைகளை பகுதி வாரி யாகத் தனித்தனியாகப் பிரித்து வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் வகையில் இப்பொருள் களை அடுக்கும் பணி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இப்பணிகளை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவல ருமான இரா.கண்ணன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். மேலும் இவற்றை விடுபடாமல் அனுப்பும்படி ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்